(UTVNEWS | COLOMBO) – காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் பூதவுடல் முழு அரச மரியாதையுடன் கம்பளை, தொலுவ ஹலியத்த டி.எம். ஜயரத்ன மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று மதியம் வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கம்பளை, தொலுவை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் முப்படைகளின் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலமாக ஹலியத்த மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது, அன்னாரின் பூதவுடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரச மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சபாநாயகர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று பொதுமக்கள் பெரும்பாரலானோர் கலந்து கொண்டுள்ளனர்.