(UTV|COLOMBO)- சோளத்தை பிரதானமாக பயிரிடும் நான்கு மாவட்டங்களில் மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அம்பாறை, மொனராகலை, பதுளை மற்றும் அனுராதபுரம் முதலான மாவட்டங்களில் படைப்புழுக்களின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அனுர வீஜேதுங்க தெரிவித்துள்ளார்.
2018ம் வருடம் ஒக்டோபர் மாதம் அம்பாறை மாவட்டத்தில் சோள பயிர்ச்செய்கையில் முதல் முறையாக படைப்புழுத் தாக்கம் அவதானிக்கப்பட்டது.
இதன் காரணமாக 80,000 ஹெக்டேயர் அளவான சோளப் பயிர் நிலங்களில் 50 வீதத்திற்கும் அதிகமான பரப்பு படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.