(UTV|COLOMBO)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(24) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட பொங்கல் வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் ஹரிக்கடுவ பிரிவெனா விஹாரைக்குச் சென்று ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மஹா பீடத்தின் மஹாநாயக்கர் மற்றும் சங்கைக்குரிய நாபானே பேமசிறி தேரரைச் சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கெட்டம்பேயில் ஸ்ரீ ராஜோபனாவாதாராமாதிபதி சங்கைக்குரிய கெப்பெட்டியாகொட ஸ்ரீ விமல தேரைச் சந்தித்தார். நாட்டை சிறப்பாக முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருப்பதாக தேரர் இதன் போது தெரிவித்திருந்தார்.