(UTV|COLOMBO)- சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.