(UTV|COLOMBO)- முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட அ.இ.ம.கா அமைப்பாளர் அலி சப்ரி அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் ரயர்கள் எரிக்கப்பட்ட நிலை இருந்ததால் வாகனங்களை திருப்பி மெதுவாக வரும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் உடனடியாக விரைந்து பாதுகாப்பை உறுதிப் படுத்தியுள்ளனர்