Trending News

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

(UTV|COLOMBO) – நோர்வூட் நகரில் இன்று(25) காலை எரிவாயு விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் 3 வர்த்தக நிலையங்கள் தீயினால் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தினால் 3 வர்த்தக நிலையங்களில் உள்ள உபகரணங்கள் சேமடைந்துள்ளதோடு, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் நோர்வூட் பிரதேச சபையினருடன் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் நகரத்தில் தீயினை பரவ விடாமல் தடுத்ததோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

Mohamed Dilsad

7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளது

Mohamed Dilsad

North Korea says it has detained US citizen

Mohamed Dilsad

Leave a Comment