Trending News

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 704 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|COLOMBO) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரிகள் 704 பேருக்கு இன்று(25) முதல் எவ்வித அனுமதிகளும் இன்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்து குறித்த திணைக்களத்தினால் காட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு பெயர் பட்டியலினை வழங்கியுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கையானது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த பெயர்கள் கணனிக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்திருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா தனது திணைக்களத்திற்கு அறிவிக்காது, நேற்று(24) பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணித்த WK 0065 என்ற விமானத்தின் ஊடாக தனது குடும்பத்தாருடன் சுவிட்சர்லாந்தின் சுரிவ் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Auspicious times for Sinhala and Hindu New Year

Mohamed Dilsad

වතු සේවක වැටුප් වැඩිකිරීමේ ගැසට් නිවේදනයට අධිකරණය මග අහුරයි.

Editor O

மஹிந்த, ஜப்பான் சென்றார்

Mohamed Dilsad

Leave a Comment