(UTV|COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்குபகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும்100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.