Trending News

மழையுடனான வானிலை நாளையிலிருந்து மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் நாளையிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல், மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

Geetha Kumarasinghe’s Parliament seat abolished

Mohamed Dilsad

Sushma Swaraj, one of India’s best known politicians dies

Mohamed Dilsad

Leave a Comment