(UTV|COLOMBO) – குழாய் வெடிப்பு காரணமாக சில பிரதேசங்களுக்கு தற்போது நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, மாபோல, வெலிசர, ராகம, ஹொரபே, கெரவலப்பிட்டிய, போய்ஸ் டவுன் மற்றும் புளுகஹகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.