Trending News

சாக்லேட் சமோசா

(UTV|COLOMBO) – சாக்லேட் சமோசா இனிப்பு வகைகளில் ஒன்று. இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள் –
கோதுமை மா- 1 கிலோ
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் – சிறிதளவு
சாக்லேட் – 500 கிராம்
பாதாம் – 250 கிராம்
முந்திரி – 250 கிராம்
பிஸ்தா – 100 கிராம்
சீனி – 1 கிலோ
கரம் மசாலா பொடி – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
பாதாம், முந்திரியை வறுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மா, சிறிதளவு நெய் மற்றும் ஏலக்காய் விதை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவில் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

முதலில் சாக்லேட்டை உருக்கி வைத்து கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸை சேர்த்து கொள்ளவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதனை முக்கோன வடிவில் சுருட்டி கொள்ளவும்.

அதனுள் உருக்கி வைத்த சாக்லேட் கலவையை போட்டு சமோசாவில் ஓரங்களில் தண்ணீர் கொண்டு அதன் முனைகளை ஒட்டி வைக்கவும்.

அனைத்து ஓரங்களையும் நன்றாக மூடி வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சமோசா பாதி அளவு வெந்தபின் வெப்பத்தை அதிகரித்து மொறுமொறுப்பாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

இப்போது சூடான சாக்லேட் சமோசா தயார்.

Related posts

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்…

Mohamed Dilsad

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Mohamed Dilsad

நடிகை மேனகா மதுவந்திக்கு அபராதம் – [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment