(UTV|COLOMBO) – களுத்துறை நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் ஹொட்டேல்கள், வர்த்தக நிலையங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் தேசிய சுகாதார பரிசோதகர் நேற்று விசேட பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இதன்போது 100 வர்த்தக நிலையங்கள் முற்றுகை இடப்பட்டதுடன், 23 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தரமற்ற அசுத்தமான உணவு வகைகளை விற்பனை செய்த நிலையங்கள், அரிசி களஞ்சிய சாலைகள், விற்பனை நிலையங்கள், அங்காடி விற்பனை நிலையங்கள் மற்றும் இரசாயன பொருட்களை பயன்படுத்திய விற்பனை நிலையங்களுக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.