(UTV|COLOMBO) – நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ஷ முன்வைத்த மனு இன்று(26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.