(UTV|COLOMBO) – அல்பேனியா நாட்டில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்பேனியா தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
அல்பேனிய கடற்கரை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. டர்ரெஸ் எனும் நகரில் உணவகம் ஒன்று முற்றிலும் இடிந்து விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.