Trending News

Prime Grand, வோட் பிளேஸ் இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடித் திட்டமாக மகுடம் சூட்டப்பட்டது

(UTV|COLOMBO) – Prime Group இன், ஆடம்பர முதன்மைத் திட்டமான Prime Grand, அதன் தனிச்சிறப்பு வாய்ந்த செழுமைக்காக, 3ஆவது ஆசிய ஆதன விருது வழங்கும் நிகழ்வில் ‘இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடி அபிவிருத்தி’ என்ற கௌரவம் மிக்க உயரிய விருதினை பெற்றுக்கொண்டது. பாங்கொக்கில் அமைந்துள்ள அதீனி ஹோட்டலில் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் Prime Group இவ் விருதினைப் பெற்றுக் கொண்டது.

இந்த நிகழ்வில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ரியல் எஸ்டேட் சந்தையைச் சேர்ந்த 500 இற்கும் அதிகமான அதிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற Property Guru Asia Real Estate உச்சிமாநாட்டின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. கொழும்பு 07 இல் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பிரதேசத்தில் அமைந்துள்ள Prime Grand, இலக்கம் 64, வோட் பிளேஸ், சுற்றுப்புறத்தின் மிகவும் மதிப்புமிக்க சின்னமாக மாறவுள்ளது. இது கொழும்பு 07 இல்
அமைந்துள்ள ஒரே ஒரு அதி உயர் தொடர்மாடித் திட்டமென்பதுடன், 2021 டிசம்பரில் குடிபுகுவதற்கு ஏற்ற வகையில் துரிதமாக தயாராகி வருகின்றது. தற்போது 31 ஆம் மாடியின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் கட்டுமானம் இந்தத் துறையின் பெரும் நிறுவனமான MAGA Engineering இனால் முன்னெடுக்கப்படுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு 3 மாதங்களின் முன்னதாகவே கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

‘இலங்கையின் சிறந்த ஆடம்பர தொடர்மாடி அபிவிருத்தி’ என்ற விருதுக்கு மேலதிகமாக, PropertyGuru Asia Property Awards 2019 நிகழ்வில் மேலும் பல விருதுகளை,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் Prime Group தனதாக்கிக் கொண்டது. Prime Group ஆனது மிகவும் விரும்பப்படும் ‘Best Developer in Sri Lanka’ என்ற விருதை தொடர்ச்சியாக 2 ஆவது ஆண்டாகவும் இம்முறையும் வென்றது. இதற்கு மேலதிகமாக Prime Groupஇன் தனித்துவமான வீட்டுத் திட்டமான ‘Prime Urban Art’, இலங்கையின் சிறந்த வீட்டுத் திட்டம் என்ற விருதை வென்றதுடன், Prime Group தனது பாராட்டத்தக்க சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளுக்காக விசேட அங்கீகார விருதினையும் பெற்றுக்கொண்டது.

உலகளாவிய வர்த்தக நாமமான Kohler இனால் வழங்கப்படும் , 2019 PropertyGuru Asia Property Awards,ஆசியாவில் உள்ள சிறந்த கட்டுமான நிறுவனங்களை வருடாந்தம் கௌரவிக்கின்றது. PropertyGuru Asia Property Awards இன் இலங்கை பிராந்தியத்துக்கான விருதுகள் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது ஆண்டினை இவ்வருடம் குறிக்கின்றது. பிராந்திய பிரிவுகளின் வெற்றியாளர்கள் பாங்கொக்கில் நடைபெற்ற உச்ச நிகழ்வான ‘PropertyGuru Asia Property Awards 2019’ இல் தமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் 2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த விருதுகள் உலகின் மிகப் பெரிய தணிக்கை மற்றும் கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றான BDO இனால், தொழில் ரீதியாக இயங்கும் மதிப்பீட்டு அமைப்பு மூலம் மேற்பார்வை செய்யப்படுகின்றது. நன்மதிப்பு, திட்டத்தின் தரம் (பணத்துக்கான பெறுமதி), விற்பனை ரீதியான வெற்றி, கட்டுமானத்தில் அடங்கியுள்ள புதுமை, முக்கிய கௌரவங்கள் மற்றும் கடந்தகால சாதனைகள் மற்றும் சான்றுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே விருதுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

PropertyGuru Asia Property Awards ரியல் எஸ்டேட் துறையில் உயரிய விருதாக கருதப்படுகின்றது. இந்த விருது தொடர்பில் கருத்து தெரிவித்த, Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால், இலங்கையின் முன்னணி நிர்மாணத்துறை நிறுவனம் என்ற வகையில், இந்த அங்கீகாரம் தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைவதோடு, இது இலங்கையில் உள்ள பொறுப்புமிக்க, நிலைபேறான குழும நிறுவனம் என்ற வகையில் நாம் பேணும் தரங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. இதன்மூலம் Prime Grandஐ நாட்டின் ரியல்
எஸ்டேட் அரங்கின் முக்கிய சின்னமாக முன்னிலைப்படுத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

கொழும்பு 07 இல் வோட் பிளேஸில் அமைந்துள்ளமை Prime Grand இன் பெறுமதிக்கான முக்கிய காரணமென்பதுடன், இலங்கையின் மிகவும் நீளமான, உயரத்தில் அமைந்த நீச்சல் தடாகம் உள்ளிட்ட இதன் தனித்துவமான வசதிகளானது இதனை மேலும் அலங்கரிக்கின்றது. Prime Grand தனித்துவமிக்கதும், புதுமையானதுமான தொடர்மாடி என்பதுடன், இது வோட் பிளேஸ், கொழும்பு 07 இல் உங்களுக்கென ஒரு அழகிய பகுதியை சொந்தமாக்கிக் கொள்ளும் அரிய வாய்ப்பினை வழங்குகின்றது. இத்திட்டம் 2021 டிசம்பரில் நிறைவடையும் வரை ஆவலுடன் காத்திருக்கின்றோம், என்றார்.

Prime Grand இன் எதிர்கால குடியிருப்பாளர்கள் பரபரப்பான கொழும்பு நகரின் கம்பீரத்தை ரசிக்கவுள்ளதுடன்,
ரம்யமான வானின் அழகை முழுமையாக கண்டு களிக்கும் வாய்ப்பையும் பெறவுள்ளனர். இதுமட்டுமன்றி அதி நவீன வசதிகளின் முழு செளகர்யத்தையும் அனுபவிக்க இது வழிசெய்கிறது. இங்கு மனைகளின் உட்புறங்களை, விருதுகள் பலவற்றை வென்ற உள்ளக வடிவமைப்பாளரான Benteo Gineva இனால் வழிநடாத்தப்படும், சிங்கப்பூரைச் சேர்ந்த IIDA International மிக நுட்பமாக வடிவமைத்துள்ளது.

மேலும் Five International இன் தனித்துவமான கட்டிடக்கலை நிபுணத்துவம் காரணமாக குடியிருப்பாளர்கள் அமைதியான சுற்றுச் சூழலையும், முழுமையான தனியுரிமையின் சிறப்பையும் தமதாக்கிக் கொள்ளவுள்ளனர். அதே நேரத்தில் சி.எஸ்.இ.யில் உள்ள அனுபவம் வாய்ந்த கட்டமைப்பு பொறியியலாளர்கள் மூலம் கட்டிடத்தின் உயர் பேண்தகமை உறுதி செய்யப்பட்டுள்ளது. Prime Grand நன்கு நிர்மாணிக்கப்பட்ட விசாலமான Simplex மற்றும் Duplex மனைகள், 4 மாடிகள் கொண்ட இரட்டை வாகன தரிப்பிடம், மூன்று நிலைகளில் அமைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளக மற்றும் வெளியக சேவைகள் மற்றும் வசதிகள், ஒவ்வொரு மனைக்குமென ஒதுக்கப்பட்டுள்ள 2 வாகன தரிப்பிடங்கள் மற்றும் பிரமாண்ட 40,000 சதுர அடிக்கும் அதிகமான இடப்பரப்பில் அமைந்த ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கான பகுதிகள் என ஆச்சர்யப்பட வைக்கும் சிறப்பம்சங்களை அள்ளி வழங்குகின்றது.

24 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்ட Prime Group ஒரு இலங்கை நிறுவனமென்பதுடன், தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக Best Developer in SriLanka விருதினை என்ற வென்றுள்ளது. Prime Group, 2019 ஆம் ஆண்டு இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக LMD இனால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுமட்டுமன்றி தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பணியாற்ற சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Prime Group மேன்மை நோக்குடன் கூடிய மறுக்கமுடியாத அர்ப்பணிப்புடன் வலுவாக நிற்பதுடன், 2021 டிசம்பர் காலப்பகுதியில் Prime Grand இன் பூர்த்தியுடன் வோட் பிளேஸில் புதிய பாரம்பரியத்தை கொண்டு வர ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றது.

Related posts

குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கஷ்டம்- செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மக்கள்

Mohamed Dilsad

Saudi forces reach Yemeni island of Socotra

Mohamed Dilsad

Gotabaya meets Ranil amidst political turmoil

Mohamed Dilsad

Leave a Comment