(UTV|COLOMBO) – புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று(27) காலை 09 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.