Trending News

அனைத்துபீட மாணவர்களுக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை

(UTV|COLOMBO) – அனைத்துபீட மாணவர்களுக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்று (27) மற்றும் நாளை(28) நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Fuel price formula committee meets today in Ministry of Finance

Mohamed Dilsad

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

Mohamed Dilsad

අලුත් අමාත්‍ය මණ්ඩලය රැස්වෙයි.

Editor O

Leave a Comment