(UTV|COLOMBO) – வடக்கு ரயில் மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் யாழ்தேவி ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை ஆரம்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டமையால் வட பகுதிக்கான ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும் சேதமடைந்துள்ள ரயில் கடவைகளை விரைவில் சீர் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கொழும்பு – கோட்டையிலிருந்து பயணிக்கு ரயில் அம்பன்பொல வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் கல்கமுவ வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கல்கமுவ மற்றும் அமன்பொல பகுதிகளுக்கு விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.