(UTV|COLOMBO) – சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஸவினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நெல் அறுவடை நெருங்கும் வேளையில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கையிருப்பிலுள்ள நெல்லை சிறு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கி அதனை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.