Trending News

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) – கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடக்கையின்போது தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் 80 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, குறித்த கடற்பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், படகில் பயணித்த 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மன்னார் – பேசாளை பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்துள்ள முடிவு

Mohamed Dilsad

Showers expected in several provinces

Mohamed Dilsad

சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில்-நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி தப்பியோட்டம்

Mohamed Dilsad

Leave a Comment