Trending News

ஜனாதிபதி கோட்டாவின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ கைது

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இந்தியா சென்ற நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் திரண்ட மதிமுகவினர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை டெல்லி பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

Mohamed Dilsad

Trump delays tariff hikes on Chinese goods ahead of talks

Mohamed Dilsad

Special investigation into clash between Constable and MP security detail

Mohamed Dilsad

Leave a Comment