(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கபட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(28) தற்காலிகமான இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டிசெம்பர் 5ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதிவரையான காலப்பகுதில் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றமம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், இந்த வழக்கு அடுத்த வருடம் மார்ச் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.