Trending News

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

(UTV|COLOMBO) – கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12,000 இற்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது.

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்படுகிறது என சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில், கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12,000 இற்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேருக்கு இந்த எச்சரிக்கை தகவல் வந்து இருக்கின்றன.

அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென்கொரியா போன்ற நாடுகளில், சில நாடுகள் ஆயிரத்துக்கும் மேலான எச்சரிக்கை தகவலை பெற்று இருக்கின்றன.

மர்ம நபர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். அதில் கடவுச்சொல் (பாஸ்வேடு) பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். அதை பார்ப்பவர்கள் தெரியாமல் கடவுச்சொல்லை பயன்படுத்தினால், உடனே ஊடுருவி அவர்களின் முக்கிய தகவல்களை திருடிவிடுகின்றனர்.

இதனால் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்காகவே பிரத்தியேகமாக கூகுள், “உயர் பாதுகாப்பு திட்டம்” ஒன்றை (அட்வான்ஸ் புரோடெக்சன் புரோகிராம்) உருவாக்கி இருக்கிறது. அதில் இணையுமாறு அவர்களை கூகுள் நிறுவனம் கேட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Related posts

நோர்வூட்டில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்

Mohamed Dilsad

UPFA to boycott Parliament today [UPDATE]

Mohamed Dilsad

26 ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பு

Mohamed Dilsad

Leave a Comment