(UTV|COLOMBO) – இந்தியாவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
பின்னர் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நரேந்திர மோடி, “பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இன்று கலந்துரையாடினோம். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 14,000 வீடுகளை கட்டியுள்ளோம்” எனவும் தெரிவித்திருந்தார்.