Trending News

கிழிந்தது ‘தர்பார்’

(UTV|COLOMBO) – தர்பார் படத்தின் ‘சும்மா கிழிகிழி’ பாடல் தண்ணிக்குடம் எடுத்து மற்றும் ஐயப்ப சுவாமி பாடலை காப்பி அடித்தது போல் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ‘சும்மாகிழி’ என்ற முதல் பாடல் அண்மையில் வெளியானது. இந்தப் பாடலை ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் பிரபலமடைந்த பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

‘சும்மா கிழிகிழி’ பாடலை யூடியூபில் பல லட்ச காணக்கானோர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் இந்த பாடல் 1990ல் தேவா இசையில் எஸ்.பி.பி பாடிய ‘தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால்’ என்ற பாடலின் காப்பியாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் ஐயப்பன் சுவாமி பாடலான ‘கட்டோடு கட்டு முடி’ என்ற பாடலின் சாயலாகவும் உள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

“Street food has been my favourite” – Meera Deosthale

Mohamed Dilsad

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை

Mohamed Dilsad

பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்

Mohamed Dilsad

Leave a Comment