Trending News

சுரக் ஷா காப்புறுதி இரத்து செய்யப்படவில்லை – டலஸ்

(UTVNEWS |COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கான சுரக் ஷா காப்புறுதித்திட்டம் இரத்து செய்யப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான சுரக் ஷா காப்புறுதித்திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.

சுரக் ஷா காப்புறுதி திட்டம் புதிய அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளாதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து கல்வி அமைச்சு இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தேசிய பொறுப்புடன் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காது பாடசாலை மாணவர்களுக்கான இந்த காப்புறுதி திட்டத்தை முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

4 arrested with 96,600 illegal cigarettes at BIA

Mohamed Dilsad

Lanka IOC also revises fuel prices

Mohamed Dilsad

ජපානයේ පාර්ලිමේන්තු මැතිවරණය අද (27) 

Editor O

Leave a Comment