Trending News

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – மட்டக்களப்பு காஞ்சரம்குடா வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 24  கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த பகுதியில் வயல் பகுதிக்கு அருகில் மண் அகழப்பட்ட நிலையில் உள்ள மண்மேடு ஒன்றில்  24 கைக் குண்டுகள் இருந்துள்ளதை கண்டு அங்கு விவசாய நடவடிக்கைக்கு சென்ற விவசாயிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் பார்வையிட்டு  அதனை வெடிக்க வைக்க நீதிமன்ற உத்தரவை பெற்று,  24 கைக்குண்டுகளை மீட்டு வெடிக்கவைத்து அழித்துள்ளனர் .

Related posts

சூடானில் கடும் மழை – 62 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

මෙරට සහල් අර්බුධය ගැන ඇමති රිෂාඩ් BBC යෙන් හෙළි කරයි

Mohamed Dilsad

Bale scores as Real beat Espanyol

Mohamed Dilsad

Leave a Comment