(UTV|COLOMBO) – நுவரெலியா– வலப்பனையில் இடம்பெற்ற மண் சரிவில் வீடொன்று சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பதியபெலெல்ல, வலப்பனை பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று (30) இரவு 7.30 மணியளவில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தில் குறித்த வீடு முழுவதுமாக மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டினுள் நான்கு பேர் இருந்துள்ள நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அவர்களை மீட்கும் பணி தாமதமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், வலப்பனை பொலிஸார், நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இன்று காலை 06 மணியளவில் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர்.
இதன்போது மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.