Trending News

சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சைக்கு 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகள் தோற்றவுள்ளர். தனியார் பரிட்சாத்திகள் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 பேர் தோற்றவுள்ளதுடன், மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு ஆகும்.

இம்முறை பரீட்சையை முன்னிட்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 133 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

නිශාන්ත මුතුහෙට්ටිගම ට එක්සත් ජාතික පක්ෂයේ සංවිධායක ධූරයක්.

Editor O

Postal strike called off

Mohamed Dilsad

Leave a Comment