(UTV|COLOMBO) – அண்மையில் அரசாங்கத்தினால் சீராக்கப்பட்ட வெட் வரி உள்ளிட்ட வரி திருத்தங்கள் நேற்று முதல் அமுலாவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில் நேரடி வரி சலுகை தொடர்பான தீர்மானங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
வரி சலுகையின் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைப்பு தொடர்பாக எதிர்வரும் வாரங்களில் மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.