(UTV|COLOMBO) – வத்தளை-ஹேகித்த பிரதான நீர்விநியோக குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இன்று அதிகாலை ஹேகித்த, பள்ளியவத்த, எலகந்த, பலகலவத்த ஆகிய பகுதிகளுக்கு நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும், மருதானை வீதி, வெலிஅமுண, எந்தல வீதி மற்றும் எலகந்த வீதியின் நீர் விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த குழாயை சரிசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.