Trending News

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் படுகாயம்

(UTV|COLOMBO) – அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரெஞ்ச் குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தோரில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு நபரை பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மற்றும் பிற தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

Briton Evans stuns seventh seed Cilic at Australian Open

Mohamed Dilsad

“பதிலடி தர முடியும் என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை” – இம்ரான் கான்

Mohamed Dilsad

இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

Mohamed Dilsad

Leave a Comment