(UTV|COLOMBO) – தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல்கள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதற்கான மனுக்கள் டிசம்பர் 6ம் திகதி ஆரம்பமாகி 13-ம் திகதி வரை பெற்றுக்கொள்ளப்படும். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 6-ம் திகதி வெளியிடப்படும் என்றும், அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் 16ம் திகதி ஆய்வு செய்யப்படும் என்றும், வேட்பு மனுக்களை 18ம் திகதிக்குகள் திரும்ப பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் திகதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.