(UTVNEWS | COLOMBO) –தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளானது இம்முறை 13 ஆவது தடவையாக நேற்று நேபாளத்தின் காத்மண்டு நகரில் கோலாகலமா ஆரம்பமானது.
நேபாள ஜனாதிபதி பித்தியா தேவி பண்டாரி போட்டித் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நேற்று ஆரம்பமான போட்டித் தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை காத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய இரண்டு நகரங்களில் நடைபெறுகின்றது.
இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், பூட்டான் மற்றும் தொடரை நடத்தும் நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் போட்டியிடுகின்றன.
இதில் மொத்தம் 26 போட்டிகளில் 1115 பதக்கங்களுக்காக வீரர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 317 தங்கமும், 317 வெள்ளியும், 481 வெண்கலப் பதக்கங்களும் உள்ளடங்குகின்றன,
இம்முறைய இலங்கையிலிருந்து 568 வீரர்கள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதோடு, அணி விளையாட்டுக்கான கிரிக்கெட், காற்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கபடி போன்ற விளையாட்டுக்களிலும் இலங்கை அணி பங்கேற்கின்றது.