(UTV|COLOMBO) – அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றரை பொருத்தும் நடவடிக்கை கட்டாயம் அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் பயணிகள் முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றரை பொருத்துவதற்கான சட்டமானது அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் போக்குவரத்து அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலிலேயே குறித்த சட்டத்தை கட்டாயம் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை முன்கெடுக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.