Trending News

கிறிஸ்தவ ஆலய தாக்குதலில் 14 பேர் பலி

(UTV|COLOMBO) – பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’ என அந்நாட்டு உள்ளூர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பர்கினோ பாசோ நாட்டின் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய தங்க நிலவரம்

Mohamed Dilsad

Hodeidah offensive: Coalition forces seize weapons supplied by Iran to Houthis

Mohamed Dilsad

Committee appointed to probe explosion in Diyatalawa bus

Mohamed Dilsad

Leave a Comment