Trending News

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றும் மழை

(UTV|COLOMBO) – நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

Lanka Coal Company Chairman and board removed

Mohamed Dilsad

NDRA checks price reduction of eye-lenses

Mohamed Dilsad

Secret tunnel found in Mexico Prison

Mohamed Dilsad

Leave a Comment