Trending News

அஜித் பிரசன்ன முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு

(UTV|COLOMBO) – இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அவர் நேற்றிரவு இந்த உணவு தவிர்ப்பினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் குறித்த பெண் அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என கோரி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அதுரலியே ரதன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகர விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Charitha Herath turns down Lake House Chairmanship

Mohamed Dilsad

ගෑස් සිලින්ඩරය පුපුරයිද..? ඇතුළේ ලොකු අවුලක්…!

Editor O

மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 5 சதவீத வரியை அறவிட தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment