(UTV|COLOMBO) – இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையை அண்மையில் அமைந்துள்ள பூங்காவொன்றில் இடம்பெற்ற புகைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது இரண்டு இராணுவ அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜகார்த்தா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பூங்காவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந் இரு இராணுவ அதிகாரிகளே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலின்போது இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஜனாதிபதி மாளிகையில் இல்லை என்று ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாயவில் அண்மையில் உள்நாட்டு கலவரங்கள் மீண்டும் எழுச்சி அடைய ஆரம்பித்துள்ளது.
கடந்த மாதம் இந்தோனேஷியாவில் மேடன் நகரில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.