Trending News

அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தடை

(UTV|COLOMBO) – அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரச நிறுவனங்களில் ஏற்படும் செலவுகளை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏதாவது அமைச்சுகளுக்கு வாகனங்கள் அத்தியாவசியமாக தேவைப்படுமாக இருந்தால் ஜனாதிபதி செயலகத்தில் காணப்படும் மேலதிக வாகனங்களில் இருந்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Alibaba Founder Jack Ma eyes Sri Lanka for e-Commerce

Mohamed Dilsad

சர்வதேச மாற்ற திறனாளிகள் விழா இன்று கிளிநொச்சியில்

Mohamed Dilsad

கித்துல் பாணியின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment