(UTV|COLOMBO) – பிலிப்பைன்ஸை தாக்கியுள்ள கம்மூரி சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காற்று மற்றும் கடும் மழையுடன் கம்மூரி சூறாவளி பிலிப்பைன்சை தாக்கிய நிலையில், இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் கம்மூரி சூறாவளி பிலிப்பைன்ஸில் நிலைக்கொண்டுள்ளதாகவும் மணித்தியாலயத்திற்கு 214 கிலோமீற்றர் வேகத்தில் அங்கு கடும் காற்று வீசுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், மனிலா சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளை 12 மணித்தியால காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.