Trending News

நேற்று பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி

(UTV|COLOMBO) -தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நேற்று தனது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார்.

இவரது 167-வது படமான தர்பார் எதிர்வரும் பொங்கல் விடுமுறையையொட்டி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து ரஜினியின் 168-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார்.

ரஜினி தனது 69-வது பிறந்தநாளை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி கொண்டாட இருக்கிறார். அதை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்ற நிலையில் ரஜினிகாந்த் தனது நட்சத்திர பிறந்தநாளை நேற்று தனது வீட்டில் கொண்டாடியுள்ளார்.

நேற்று தன்னுடைய பிறந்த நட்சத்திரமான திருவோணம் நாள் என்பதால், இதற்காக வீட்டில் சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளார்.

Related posts

மாகாண ஆளுனர்களும் பதவி விலகல்

Mohamed Dilsad

இவ்வருடத்தில் 2 சந்திரகிரகணங்கள் 3 சூரியகிரகணங்கள்

Mohamed Dilsad

Central Bank warns of ATM card fraud; Urges public to be vigilant

Mohamed Dilsad

Leave a Comment