(UTV|COLOMBO) – இந்நாட்களில் ட்ரெண்ட ஆன ஒன்று தான் சுவர் ஓவியங்கள் வரைவது. பொது இடங்களில் இளைஞர்கள் இந்நாட்களில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.
அதில்; “நமது இளைஞர்களின் முயற்சி, தலைமைத்துவப் பண்பு, ஆக்கபூர்வமான சக்தி மற்றும் குழு முயற்சி போன்றவற்றால் நமது எதிர் காலத்தின் போக்கை மாற்றுவதற்கான ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது இந்த நேரிய சிந்தனையை ஆக்கபூர்வமான சக்தியாக வெளிக்கொண்டுவருவது உற்பத்தித்திறன் மிக்க கலாச்சாரத்திற்கு அவர்கள் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒரு வளமாகும்.” எனவும் தெரிவித்துள்ளார்.