Trending News

சாதாரண தரப் பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள்

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாம் கட்டத் திருத்தப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மாதம் 26 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

திருத்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதலாம் தவணை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், ஏனைய பாடசாலைகளின் முதலாம் தவணை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

JO delegation holds talks with President

Mohamed Dilsad

ஆபாச வசனம் பேசியது ஏன்?

Mohamed Dilsad

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment