(UTV|COLOMBO) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹநாயக்க தேர்களை இன்று(03) சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமரின் குடும்பத்தினருடன் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்னதேரரையும் சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டுள்ளார்.
தனது பதவி காலத்தில் தனக்கான ஒத்துழைப்பை வழங்கியமைக்காக ரணில் விக்ரமசிங்க மஹாநாயக்கர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.