Trending News

அனைத்து அரசியல் கட்சிகளதும் செயலாளர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO) – அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று(04) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், தேர்தல் பிரசார செலவினங்கள், கட்டுப்பணம், ஊடக விழுமியங்கள் குறித்த புதிய சீர்த்திருத்தங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களை மீள்திருத்தம் செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

Sri Lankan shares end at 1-yr high on foreign buying, trade concession

Mohamed Dilsad

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

Mohamed Dilsad

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடர்: முழு விபரம் இதோ!

Mohamed Dilsad

Leave a Comment