Trending News

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கைக்கு அண்மையாக விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில்சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும்மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

வயதெல்லையை நீடிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!!!

Mohamed Dilsad

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

Mohamed Dilsad

கிழக்கில் முதல்வரின் முயற்சி வெற்றி-முதற்கட்டமாக ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment