(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் நாளை(05) கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து பொது இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதுடன் கட்சியின் எதிர்க்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.