Trending News

“Spirit of Cricket award” நியூஸ்லாந்து அணிக்கு

(UTVNEWS | COLOMBO) – நியூசிலாந்து அணிக்கு “Spirit of Cricket award” ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

2019 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒரு தொடர் என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத தொடராக இருந்தது.

இந்நிலையில், உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய நியூஸ்லாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி (Spirit of Cricket award) எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் வழங்கி கௌரவித்துள்ளது.

‘உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூஸ்லாந்து அணியின் விளையாட்டுத்திறன், பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவை வெளிப்பட்டது.

அந்த அணியின் வீரர்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள்’ என மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார்.

Related posts

Sri Lanka High Commission in London celebrates Iftar

Mohamed Dilsad

Rs. 10mn worth gold detected at BIA

Mohamed Dilsad

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா

Mohamed Dilsad

Leave a Comment