(UTV|COLOMBO) – தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தை கல்வி அமைச்சர் டக்லஸ் அழகப்பெரும முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதியின் விஞ்ஞாபன அடிப்படையின் கீழ் நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டது.